close
Choose your channels

'STR 48' படத்தில் சிம்புவை விட பலமடங்கு சம்பளம் வாங்கும் நடிகை தான் நாயகியா?

Saturday, May 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்புவை விட பல மடங்கு சம்பளம் வாங்கும் பிரபல நடிகை ஒருவர் ’STR 48’ படத்தில் நாயகி ஆக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிம்பு நடித்த ’பத்து தல’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றதை அடுத்து அவர் நடிக்க இருக்கும் 48வது படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ’மாநாடு’ ’வெந்து தணிந்தது காடு’ ’பத்து தல’ ஆகிய தொடர் வெற்றிக்கு பிறகு இந்த படம் நிச்சயம் சிம்புவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் படமாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி தேசிய பெரியசாமி ரஜினிக்கு கூறிய கதையில் தான் சிம்பு தற்போது நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்று கூறப்படுவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருப்பது மட்டுமின்றி கமல்ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் நாயகிக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ள கேரக்டர் என்பதால் பிரபல நடிகை ஒருவரைத்தான் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக தமிழில் பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது தீபிகா படுகோன் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சிம்பு ஒரு படத்திற்கு 15 முதல் 20 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலையில் தீபிகா படுகோனே பாலிவுட்டில் முன்னணி நடிகையை என்பதால் அவர் 40 முதல் 50 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அதிலும் சமீபத்தில் ஷாருக்கான் உடன் தீபிகா படுகோனே நடித்த ’பதான்’ திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்ததை அடுத்து அவரது சம்பளம் பல மடங்கு உயர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.

எனவே சிம்புவை விட பல மடங்கு அதிகம் சம்பளம் வாங்கும் தீபிகா படுகோன் இந்த படத்தில் நாயகியாக நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.