close
Choose your channels

வித்தியாசமான கேரக்டரில் ஜிபி முத்து: வைரல் போஸ்டர்!

Saturday, April 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிக் டாக் மூலம் பிரபலமடைந்த ஜிபி முத்து வித்தியாசமான கேரக்டரில் ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு, போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது .

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி என்ற பகுதியை சேர்ந்த ஜிபி முத்து டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமடைந்தார். நெல்லை தமிழில் ஒரு சில கொச்சையான வார்த்தைகள் உடன் அவர் பதிவு செய்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது. டிக் டாக் தடைக்கு பிறகு தற்போது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் .

இந்த நிலையில் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் ஜிபி முத்து, தற்போது வெற்றி ஹீரோவாக நடித்து வரும் ’பம்பர்’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் அவர் துப்பாக்கி பாண்டியன் என்ற வித்தியாசமான கேரக்டரில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது .

வெற்றி ஜோடியாக சிவானி நடிக்கும் இந்த படத்தில் ஹரிஷ் பெராடி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை சிவகுமார் என்ற அறிமுக இயக்குனர் இயக்கி வருகிறார். கோவிந்த் வசந்தா இசையில் உருவாகும் இந்த படத்தை வேதா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படம் லாட்டரி சீட்டை பற்றிய ஒரு காமெடி திரில்லர் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.