close
Choose your channels

'வலிமை' அப்டேட் தந்த தமிழக அமைச்சர்: குஷியில் அஜித் ரசிகர்கள்!

Tuesday, August 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் அப்டேட்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அப்டேட்கள் வரும் ஒவ்வொரு நாளும் அஜித் ரசிகர்கள் குஷியில் இருப்பார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ’வலிமை’ குறித்து சட்டசபையில் இன்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று சட்டசபையில் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் ’வலிமை’ என்ற பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அஜித் ரசிகர்கள் அஜித் நடித்து வரும் படத்தின் டைட்டிலில் சிமெண்ட் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியிருப்பதை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.