close
Choose your channels

இன்று விஜய் ரசிகர்களுக்கு இன்னொரு தீபாவளி

Friday, January 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் இன்று விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 62' படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் அவரது ரசிகர்களுக்கு நாளை இன்னுமொரு தீபாவளியாகவே கருதப்படுகிறது

ஆம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் பிரமாண்டமான தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெறுவதோடு இரண்டு நாள் படப்பிடிப்பும் நடைபெறவுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய், கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.