close
Choose your channels

கமல்ஹாசன் - மணிரத்னம் படத்தில் இந்த 2 பிரபல ஹீரோக்களா? வேற லெவல் தகவல்..!

Tuesday, September 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ’கமல் 233’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’கமல் 234’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு செய்வதில் மணிரத்னம் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது மேலும் இரண்டு முன்னணி ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் ஜெயம் ரவி, இன்னொருவர் துல்கர் சல்மான் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையானால் இருவரும் முதல் முதலாக கமல்ஹாசன் உடன் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்கப் போவதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ‘கமல் 233’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.