close
Choose your channels

'அசுரன்' பாடல் குறித்து ஆச்சரிய தகவல் அளித்த ஜிவி பிரகாஷ்

Sunday, March 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டர்களில் தனுஷ் நடித்து வருகிறார். அப்பா தனுஷூக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து வருகிறார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுதான்

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், இந்த படத்தின் பாடல் கம்போஸிங் பணியை தொடங்கிவிட்டதாக சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது 'அசுரன்' படத்திற்காக இரண்டு பாடல்களை முடித்துவிட்டதாகவும், அதில் ஒன்று சூப்பர் டான்ஸ் பாடல் ஒன்றும், இந்த பாடலுக்காக காத்திருப்பவர்களுக்கு விரைவில் ஆச்சரிய தகவல் உண்டு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தனுஷ், வெற்றிமாறன், கலைப்புலி எஸ்.தாணு ஆகிய இந்த பெருமைக்குரிய கூட்டணியில் இணைந்துள்ளது தனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் 71 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகும் இந்த படம் இவ்வாண்டு கோடை விடுமுறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.