close
Choose your channels

விஷால் அந்த ஒன்றை சொல்லியே இத்தனை வருடங்களாக ஏமாற்றி வருகிறார் என ’லத்தி’ டீசர் வெளியீட்டு விழாவில் உதயநிதி!

Monday, July 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் அந்த ஒன்றை சொல்லியே இத்தனை வருடங்களாக ஏமாற்றி வருகிறார் என ’லத்தி’ டீசர் வெளியீட்டு விழாவில் உதயநிதி கிண்டலுடன் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

விஷால் நடித்த ’லத்தி’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த டீசரை நடிகர், தயாரிப்பாளர், எம்எல்ஏ உதயநிதியின் வெளியிட்டார். இந்த டீசரை வெளியிட்டு பேசிய உதயநிதி, ‘விஷால் எனது பள்ளி கல்லூரி காலத்து நண்பன் என்றும் அவர் திரையுலகில் நன்றாக வளர்ந்து வருவது எனக்கு மகிழ்ச்சி என்றும் கூறினார். 

மேலும் போலீஸ் வேடம் என்றால் விஷால் மிகவும் சிறப்பாக நடிப்பார் என்றும் நான் நடித்த போலீஸ் படத்தில் சண்டைக்காட்சி இல்லை, பாடல் காட்சி இல்லை என்றும் அப்படி படமாக தான் நான் தேர்வு செய்வேன் என்றும் கூறினார்.

மேலும் விஷால் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்யாமல் உள்ளார் என்றும் சீக்கிரம் அந்த கட்டிடத்தை கட்டி முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அதை வைத்து விஷால் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருவதாகவும் கிண்டலுடன் உதயநிதி பேசினார். இதனையடுத்து மேடைக்கு வந்த விஷால், உதயநிதியுடனான நட்பு குறித்து பேசினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos