close
Choose your channels

காதலர் தினத்தில் கைகோர்க்கும் கவுதம் மேனன் - சூர்யா

Tuesday, February 13, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த 'காக்க காக்க', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்கள் பெரும் வெற்றியை பெற்றது. அதன்பின்னர் மீண்டும் இருவரும் விரைவில் ஒரு படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளைய காதலர் தினத்தில் இருவரும் இணையவுள்ளனர்.

ஆம், கவுதம் மேனன் இயக்கி வரும் படம் ஒன்றின் பாடலை நாளை நடிகர் சூர்யா வெளியிடுகிறார். தொலைக்காட்சி புகழ் டிடி மற்றும் டொவினோ தாமஸ் நடிக்கும் இந்த படத்தில் இடம்பெற்ற 'உளவிரவு' என்ற பாடலை நாளை காலை 10 மணிக்கு சூர்யா இணையதளத்தில் வெளியிடுகிறார்.

தற்போதைய டெக்னாலஜி உலகில் இணையதளத்தில்தான் காதலர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்கள் அன்பை பகிர்ந்து கொள்கின்றனர். நேரில் சந்திப்பதால் கிடைக்கும் அபூர்வ உணர்வை அவர்கள் இழந்து வருகிறார்கள் என்பதை குறிக்கும் வகையில் இந்த பாடல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பாடலின் இரண்டு வரிகள் இதோ:

மின் முத்தம் ஏதும் - உன் மெய் முத்தம் போலே அல்ல

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.