close
Choose your channels

விஜய்சேதுபதி பட இயக்குனருக்கு ரூ.75 லட்சம் மதிப்பு கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

Monday, March 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த இரண்டு படங்கள் இந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ஒன்று தளபதி விஜய்யுடன் நடித்த ’மாஸ்டர்’, இன்னொன்று தெலுங்கில் அவர் நடித்த ’உப்பன்னா’. இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது என்பதும் இந்த இரண்டு படங்களிலும் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனாவிற்கு பின்பு வெற்றி பெற்ற படங்களில் இந்த இரண்டும் மிக முக்கியமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ’உப்பன்னா’ படத்தில் ஜாதி வெறி பிடித்த நாயகியின் தந்தையாக நடித்த விஜய் சேதுபதியின் நடிப்பைப் பிரபல தெலுங்கு நடிகர்களே பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது

தேஜ் மற்றும் கீர்த்தி ஷெட்டி காதலர்களாக நடித்திருக்கும் இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரி குவித்த நிலையில் இந்த படத்தின் புஜ்ஜி பாபுவுக்கு இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரூபாய் 75 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரை பரிசாக அளித்துள்ளார். இந்த காரில் இயக்குனர் தனது நண்பர்களுடன் சென்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.