பக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை; சூர்யா அணுகுமுறை குறித்து வைரமுத்து
சூப்பர் மாடல் அழகி நடிகை ஒருவர், நடிகர் சூர்யா மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து உள்ளார் என்பதும் அந்த விமர்சனத்திற்கு சூர்யா தனது பாணியில் நாகரீகமாக பதில் அளித்தார் என்பதும் தெரிந்ததே. மேலும் தனது ரசிகர்களை இது போன்ற விஷயத்தில் கவனம் செலுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் ஆக்கப்பூர்வமான விஷயங்களில் தனது ரசிகர்கள் செயல்பட வேண்டும் என தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்
சூர்யாவின் இந்த மெச்சூரிட்டியான பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த நிலையில் கவியரசு வைரமுத்து அவர்கள் சூர்யாவின் இந்த அணுகுமுறை குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவிதை வடிவில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சுமத்தப்பட்ட பழியின்மீது
சூர்யாவின் அணுகுமுறை நன்று.
பக்குவப்பட்டவர்கள்
பதற்றமுறுவதில்லை;
பாராட்டுகிறேன்.
நதியோடு போகும் நுரையோடு
கரை கைகலப்பதில்லை
கவியரசு வைரமுத்து அவர்களின் இந்த டுவீட்டுக்கு சூர்யா ரசிகர்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
சுமத்தப்பட்ட பழியின்மீது
— வைரமுத்து (@Vairamuthu) August 12, 2020
சூர்யாவின் அணுகுமுறை நன்று.
பக்குவப்பட்டவர்கள்
பதற்றமுறுவதில்லை;
பாராட்டுகிறேன்.
நதியோடு போகும் நுரையோடு
கரை கைகலப்பதில்லை.@Suriya_offl