close
Choose your channels

'வேதாளம்' - ரிலீஸ் தேதியுடன் போஸ்டர் வெளியானது?

Monday, October 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜீத் நடித்த 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் டப்பிங் மற்றும் பின்னணி இசை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

'வேதாளம்' திரைப்படம் வரும் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. வியாழக்கிழமை செண்ட்மெண்ட் படி இந்த படம் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'வீரம்' சிவா இயக்கி வருகிறார். அனிருத்தின் இசையமைப்பில் ஏ.எம்.ரத்னம் அவர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் அஜீத் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.