close
Choose your channels

தமிழில் உருவாகி வரும் இன்னொரு ரோட் மூவி'

Thursday, February 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் விக்ரம், சமந்தா நடிப்பில் வெளியான '10 எண்றதுக்குள்ள' படம் ஒரு ரோட் மூவியாக வெளிவந்தது. அதேபோல் விஷால் நடித்த கதகளி திரைப்படமும் சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் ஒரு ரோட் மூவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதே பாணியில்தான் விக்ரம்பிரபு நடித்து வரும் 'வீரசிவாஜி' படமும் ஒரு ரோட்மூவியாக உருவாகி வருவதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


விக்ரம் பிரபு இந்த படத்தில் கால்டாக்சி டிரைவராக நடித்துள்ளதாகவும், பாண்டிச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் நடைபெறும் சம்பவங்கள்தான் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

விக்ரம் பிரபு, ஷாமிலி, ஜான்விஜய், நான் கடவுள் ராஜேந்திரன், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.