close
Choose your channels

விஜய்சேதுபதியின் 'சேதுபதி' சென்சார் தகவல்கள்

Thursday, February 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடிக்கும் இரண்டு படங்கள் இம்மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. நலன்குமாரசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடித்த 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அதற்கு அடுத்த வாரம் அதாவது பிப்ரவரி 19ஆம் தேதி விஜய்சேதுபதி நடித்த மற்றொரு திரைப்படமான 'சேதுபதி' ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சேதுபதி' படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் "U"சர்டிபிகேட் அளித்துள்ளனர். இதனால் இந்த படம் தமிழக அரசின் வரிவிலக்கு பெறும் வாய்ப்பை பெற்றுள்ளது. எனவே இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


முதன்முதலாக போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்துள்ள விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். ஏற்கனவே இந்த ஜோடி 'பீட்சா' என்ற வெற்றி படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிக எதிர்பார்ப்புகளில் உள்ள படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.