close
Choose your channels

ஏ.ஆர்.முருகதாசுடன் இணையும் விக்ரம்பிரபு

Saturday, June 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் வாரிசான விக்ரம்பிரபு கும்கி' முதல் 'இது என்ன மாயம்' வரையிலான படங்களில் நடித்து வளர்ந்து வரும் நாயகனாக விளங்கி வருகிறார். இந்நிலையில் அவர் நடித்து முடித்துள்ள 'வாஹா' மற்றும் 'வீரசிவாஜி' ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

இந்நிலையில் விக்ரம்பிரபுவின் 'வீரசிவாஜி' படத்தின் டீசர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த டீசரை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடுகிறார்.

ஷாலினி அஜித்தின் தங்கை ஷாமிலி நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஜான்விஜய், மொட்டை ராஜேந்திரன், ரோபோசங்கர், யோகிபாபு, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். கணேஷ் விநாயக் இயக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.