close
Choose your channels

இது வெங்கட்பிரபு டீமின் கலகலப்பான பிக்பாஸ்

Saturday, July 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை கலாய்த்து பல மிமிக்களும் வீடியோக்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் வழக்கமான டீம் பிக்பாஸ் ஷோ போன்று ஒரு நிகழ்ச்சியை தயாரித்து வருகின்றனர். வெங்கட்பிரபுவின் 'மொட்டபாஸ்' என்ற பெயரில் உருவாகி வரும் இந்த நிகழ்ச்சி விரைவில் வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் நிறுவனத்தின் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.
இதன் புரமோ வீடியோவில் நடிகர் சிவா பேசியபோது, 'எல்லோருக்கும் பயம், எல்லாரும் சேர்ந்து என்னையே டார்கெட் பண்றாங்க! நான் ஜெயிச்சிருவேன்னு எல்லோருக்கும் பயம், ஏன்னா, நான் மட்டும்தான் இந்த இண்டஸ்ட்ரியில இருந்து வரலை. எல்லாரும் என்னையே டார்கெட் பண்றாங்க, இவங்களுக்கு எல்லாம் என்னை பார்த்து பொறாமையா இருக்குது! என்னோட அழகை பார்த்து பொறாமையா இருக்குது! என்னோட திறமைய பார்த்து பொறாமைப்படறாங்க' என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி மாதிரியே பேசி கலகலப்பாக்கியுள்ளார்.
புரமோவே பக்காவாக இருப்பதால் இதன் முழுவடிவம் வந்தால் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிடும் என்றே தோன்றுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.