close
Choose your channels

வெங்கட்பிரபு-காஜல் அகர்வால் வெப்சீரீஸ் புதிய அப்டேட்!

Wednesday, September 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் 'மாநாடு என்ற படத்தை இயக்கவிருந்த இயக்குனர் வெங்கட்பிரபு, அந்த படத்தில் இருந்து சிம்பு நீக்கப்பட்டதை அடுத்து தற்போது வெப் சீரிஸ் ஒன்றின் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். வெங்கட்பிரபு, காஜல் அகர்வால் ஆகிய இருவரும் பணியும் முதல் வெப் சீரிஸ் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த வெப்சீரிஸ் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குகிறது. இந்த வெப்சீரிஸ் 10 எபிசோட்களாக ஹாட்ஸ்டாரில் வெளிவரும் என்றும் இந்த வெப்சீரிஸ் ஒளிபரப்பும் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது

நடிகை காஜல் அகர்வால் தற்போது 'பாரீஸ் பாரீஸ்', 'கால் செண்டர்', மும்பை சாகா', சூர்யாவின் 39வது படம் மற்றும் 'இந்தியன் 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 'பாரீஸ் பாரீஸ்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.