close
Choose your channels

விசித்ரா பார்ட் 2 பாக்க போறீங்க.. முதுகில் குத்தியவர்களுக்கு ஒரு சவால்.. பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!

Friday, November 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் விசித்ரா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் மோசமாக பெர்பார்மன்ஸ் செய்த போட்டியாளர்கள் என ஒட்டுமொத்தமாக அனைவரும் சேர்ந்து தேர்வு செய்ததை அடுத்து இனிமேல் தான் விசித்ரா பார்ட் 2 என்பவரை பார்க்க போகிறீர்கள் என அவர் சவால் விட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இன்று வெளியான அடுத்த ப்ரோமோ வீடியோவில் இந்த வாரம் முழுவதும் சிறப்பாக பங்கெடுத்துக் கொள்ளாத இரண்டு மோசமான போட்டியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என பிக் பாஸ் கூறுகிறார் இதை அடுத்து முதலாவதாக தினேஷ் அர்ச்சனாவை கூற, நிக்சன் விசித்ராவை கூறுகிறார். ரவீனாவும் அர்ச்சனா மற்றும் விசித்ரா என்று கூற, விஷ்ணுவும் விசித்ரா பெயரை கூறுகிறார்

டைட்டில் வின்னர் என்ற கனவில் இருக்கும் சரவணன் விக்ரம் வரும்போது விசித்ராவை கூறியதோடு, ‘விசித்திராவை நான் எங்குமே பார்க்கவில்லை என்று கூற அப்போது விசித்ரா கேலியாக ’அப்படியாடா’ என்று கூறுகிறார். கூல் சுரேஷ் கூட அர்ச்சனாவை சொல்கிறார், அதேபோல் பூர்ணிமாவும் எதிர்பார்த்தபடியே விசித்ரா மற்றும் அர்ச்சனாவை கூறுகிறார்.

இதனை அடுத்து ’விசித்ரா எழுந்து பேசியபோது ஒன்றாக சேர்ந்து பர்சனலா எல்லோரும் சேர்ந்து பண்ணி இருக்கீங்க, இனிமேல் தான் விசித்ரா பார்ட் 2 வை பார்க்க போகீறீர்கள்’ என்று சவால் விடுகிறார். அப்போது அர்ச்சனாவும் ’நானும் தான்’ என்று கூறுகிறார்

இதையடுத்து இனிமேல் தான் விசித்ரா தனது ஒரிஜினல் முகத்தை காட்டப் போகிறார் என்பது இந்த சவாலில் இருந்து தெரிய வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.