close
Choose your channels

மணிரத்னம் பட டைட்டிலில் உருவாகும் படத்தில் விதார்த்-உதயா!

Saturday, August 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரபு, கார்த்திக், நிரோஷா, அமலா நடித்த திரைப்படம் 'அக்னி நட்சத்திரம்'. இந்த படம் கடந்த 1988ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இதே டைட்டிலில் தற்போது ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது.

விதார்த் மற்றும் உதயா ஆகியோர் நடித்து வரும் திரைப்படத்திற்கு 'அக்னி நட்சத்திரம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை அறிமுக இயக்குனர் சரண் இயக்கி வருகிறார். இந்த படத்தை கர்ஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ் மற்றும் ஜேசன் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

மணிரத்னம் இயக்கிய படத்தின் டைட்டிலாக இருந்தாலும் இரு படங்களுக்கும் டைட்டிலை தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நாயகிகள் உள்பட மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிகிறது. விதார்த் தற்போது 'சித்திரம் பேசுதடி 2', மற்றும் 'ஆயிரம் பொற்காசுகள்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.