close
Choose your channels

நயன் போட்டோ எடுக்கும்போது விக்கி என்ன செய்கிறார் பாருங்க: வைரல் புகைப்படங்கள்

Friday, June 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தற்போது தாய்லாந்து நாட்டில் தேனிலவில் இருக்கும் நிலையில் அவர் போட்டோ எடுக்கும்போது விக்னேஷ் சிவன் செய்த செயல் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் கடந்த சில நாட்களாக இந்த நட்சத்திர தம்பதிகள் தாய்லாந்து நாட்டில் தேனிலவு கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேனிலவு குறித்த புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் தாய்லாந்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனை போட்டோ எடுக்கும் போது, விக்னேஷ் சிவன் நயன்தாராவை போட்டோ எடுத்து உள்ளார். ‘நயன் என்னை கிளிக்கிங் செய்யும்போது நான் அவரை கிளிக்கிங் செய்தேன்’ என்று கேப்ஷனாக விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

மேலும் நீங்கள் நயன்தாராவை எடுத்த புகைப்படங்கள் ஓகே, நயன்தாரா உங்களை எடுத்த புகைப்படங்கள் எங்கே? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த புகைப்படங்களையும் விரைவில் விக்னேஷ் சிவன் பதிவு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.