close
Choose your channels

விக்னேஷ் சிவனை இறுக்கி கட்டியணைத்த நயன்: செம கேப்ஷனுடன் வைரலாகும் புகைப்படம்

Sunday, July 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த மாதம் 9ஆம் தேதி விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவை திருமணம் செய்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் தனது சமூக வலைதளங்களில் அவ்வப்போது நயனுடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இடம்பெற்ற ’நான் பிழை’ பாடலின் வரியான ‘நினைச்சா தோணும் இடமே’ என்ற கேப்ஷன் உடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார் என்பதும் இந்த ரொமான்ஸ் புகைப்படம் நேற்று சமூக வலைதளங்களில் மிக பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று ’நான் பிறந்த தினமே’ என்ற அதே பாடலின் வரியை கேப்ஷனாக பதிவு செய்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவனை நயன்தாரா இருக்க கட்டி அணைத்தவாறு உள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகளை தொடர்ந்து கேப்ஷனாக கொண்டு விக்னேஷ் சிவன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் நாளை என்ன புகைப்படத்தை வெளியிட போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.