close
Choose your channels

உலக நாயகனுடன் சிலமணி நேரங்கள்: விக்னேஷ் சிவன் வெளியிட்ட சூப்பர் வீடியோ

Saturday, July 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமலஹாசனுடன் சில மணி நேரங்கள் என்ற மறக்க முடியாத வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் தொடங்கியது என்பதும் இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளுடன் இந்த நிகழ்ச்சியின் பார்வையாளராக கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழர்களின் பெருமையையும், செஸ் விளையாட்டுடன் தமிழர்களுக்கு உள்ள இணைப்பையும் எடுத்துக்கூறும் வகையில் வீடியோ ஒன்று ஒளிபரப்பானது. இந்த வீடியோவுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் குரல் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் குழுவினர் கலந்துரையாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது தயாராகி வருகிறது .

இந்த வீடியோவின் கேப்ஷனாக விக்னேஷ் சிவன் பதிவு செய்தபோது, ‘உலக நாயகனுடன் சில மணி நேரங்கள் செலவழிக்க நேரம் கிடைத்ததை எண்ணி நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய அறிவு, அவர் அளித்த விளக்கங்கள் மற்றும் அவர் எங்களுக்கு கூறிய நுணுக்கங்கள் ஆகியவை எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.