close
Choose your channels

கேன்ஸ் திரைப்பட விழாவில் இருந்து திடீரென இந்தியா திரும்பிய விக்னேஷ் சிவன்.. காரணம் இதுதான்..

Monday, May 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் சென்று இருந்த விக்னேஷ் சிவன் தற்போது ஐபிஎல் இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு இந்தியா திரும்ப இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் இந்தியாவின் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டார். இந்த திரைப்பட விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலான நிலையில் இந்த விழாவில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை என்பது அவர் பதிவு செய்த புகைப்படங்களில் இருந்து தெரிய வந்தது.

இந்த நிலையில் நேற்று குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற இருந்த நிலையில் அவர் இந்தியா திரும்ப இருப்பதாகவும் ஐபிஎல் போட்டியை காண மிகவும் ஆவலாக இருப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று போட்டி ஒத்தி வைக்கப்பட்டதை அடுத்து இன்று போட்டி நடைபெற இருப்பதால் இன்றைய போட்டியில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.