close
Choose your channels

விஜய் 60 டைட்டில் குறித்த முக்கிய தகவல்

Friday, August 26, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விஜய் 60' படத்தின் டைட்டில் குறித்து கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
'எங்க வீட்டு பிள்ளை' தான் இந்த படத்தின் டைட்டில் என வதந்தி கிளம்பி அதனை படக்குழுவினர் மறுத்த செய்தியை பார்த்தோம். இதன் பின்னர் இந்த படத்திற்கு 'நம்ம வீட்டு பிள்ளை', உங்க வீட்டு பிள்ளை' என இணையவாசிகள் ஆளாளுக்கு ஒரு பெயரை வதந்தியாக கிளப்பி வந்தனர்.
இந்நிலையில் படக்குழுவினர்களுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இந்த படத்தின் டைட்டில் குறித்த ரகசிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்த படத்தின் டைட்டில் விஜய்யின் முந்தைய படங்களின் டைட்டில்களான கத்தி, துப்பாக்கி, தெறி, ஜில்லா வரிசையில் ஒரே வார்த்தை உள்ள டைட்டில் என்று கூறப்படுகிறது. அந்த ஒரு வார்த்தை என்ன என்பதை அறிய நாம் அனைவரும் தீபாவளி வரை பொறுத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.