close
Choose your channels

விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sunday, April 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி, அர்ஜூன் இணைந்து நடித்த 'கொலைகாரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து இந்த படம் இம்மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

'கொலைகாரன்' படத்தின் டிரைலர் வரும் 24ஆம் தேதி புதன்கிழமை வெளியாகவுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. டிரைலர் ரிலீஸ் நேரம் மற்றும் டிரைலரை வெளியிடும் பிரபலம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா, சீதா, நாசர், சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ ஏகாம்பரம் இயக்கியுள்ளார். சைமன் கிங் இசையில் முகேஷ் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரதீப் தயாரித்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.