close
Choose your channels

'திமிரு பிடிச்சவன்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

Monday, November 5, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்த 'திமிரு பிடிச்சவன்' திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் 'சர்கார்' தமிழகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாவதால் திரையரங்குகள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு புதிய ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் 'திமிரு பிடிச்சவன்' திரைப்படம் தற்போது நவம்பர் 16ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு புதிய ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரும் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி, நிவேதா பேத்ராஜ், டேனியல் பாலாஜி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கணேஷா இயக்கியுள்ளார். புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மீண்டும் தொடங்கிவிட்டன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.