close
Choose your channels

இளம் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி

Sunday, February 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 2016ஆம் ஆண்டு சிரிஷ், பாபிசிம்ஹா நடிப்பில் அனந்தகிருஷ்ணன் இயக்கிய திரைப்படம் 'மெட்ரோ'. மெட்ரோ நகரங்களில் நிகழும் செயின் திருட்டு கதையம்சம் கொண்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'மெட்ரோ' இயக்குனர் அனந்தகிருஷ்ணன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். இந்த படத்தை TD ராஜா தயாரிக்கவுள்ளார். இந்த தகவலை விஜய் ஆண்டனி தனது சமுக வலைத்தளத்தில் குறிப்பிட்டு, 'பாலிடிக்ஸ்' என்ற தலைப்பிலான புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார். இதனால் இந்த படத்தின் டைட்டில் 'பாலிடிக்ஸ்' என்று இருக்கலாம் என்றும் இந்த படம் ஒரு அரசியல் படம் என்றும் கருதப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

விஜய் ஆண்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கி வரும் 'தமிழரசன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கின்றார் என்பதும், இயக்குனர் மோகன்ராஜாவின் மகன் பிரணவ் மோகன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.