close
Choose your channels

இளையதளபதியிடம் வாழ்த்து பெற்ற இளம் நடிகர்

Monday, December 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரும், சத்யராஜின் மகனுமான சிபிராஜ் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளிவந்த திரைப்படம் 'சத்யா'. இந்த படம் முதல்நாள் முதல் காட்சி முடிந்தவுடனே சமூக வலைத்தளங்களில் பாசிட்டிவ் ரிப்போர்ட் பெற்றது. மேலும் ஊடகங்களும் அதிக ஸ்டார்கள் கொடுத்து இந்த படத்தை பாராட்டி விமர்சனம் செய்தன

இந்த நிலையில் இளையதளபதி விஜய், நடிகர் சிபிராஜை அழைத்து தனது பாராட்டுக்களையும், 'சத்யா' படம் வெற்றியடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதனை தனது சமூக வலைத்தளத்தில் சிபிராஜ் பெருமையுடன் பகிர்ந்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படம் கடந்த வாரயிறுதி நாட்களில் சென்னையில் 17 திரையரங்குகளில் 145 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.49,00,287 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து படங்களிலும் இந்த படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.