என்னால தான் முடியல.. நீங்களாவது இதை அனுபவியுங்கள்: துள்ளி குதித்து வீடியோ பதிவிட்ட டிடி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


என்னால்தான் முடியவில்லை, நீங்களாவது அனுபவியுங்கள் என துள்ளி குதித்து விஜய் டிவி டிடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சின்னத்திரை உலகில் மிகவும் பிரபலமானவர் டிடி என்பதும் விஜய் டிவியில் அவர் பல வருடங்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. அவரது பல நிகழ்ச்சிகள் இன்றளவும் பிரபலமாய் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆங்கில பட்டாதாரரியான டிடி சிறுவயதில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டதாகவும் ஆனால் அது தன்னால் முடியவில்லை என்றும் கூறியுள்ளார். தற்போது ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டிக்கு சென்றுள்ள அவர் இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவாக இருந்தது. ஆனால் ஒரு ஆங்கில பட்டாதாரியாக எனக்கு அந்த கனவு நிறைவேறவில்லை. ஆனால் மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் வசதி உள்ளவர்கள் ஆக இருந்தால் இந்த பல்கலைக்கழகத்தில் படியுங்கள். இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாது’ என்று கூறினார்.
மேலும் அவர் தனது ஆங்கில ஆசிரியருக்கு இந்த வீடியோவை டேக் செய்து ’ஆங்கிலம் படிக்க விரும்பும் பாணவர்களுக்கு இந்த பல்கலைகழகம் குறித்து தயவு செய்து கூறுங்கள் என்றார். மேலும் இந்த பல்கலைக்கழகம் பழமையானது என்றும் 11 ஆம் நூற்றாண்டில் இந்த பல்கலைக்கழகம் இயங்கி வந்ததாக குறிப்புகள் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.