close
Choose your channels

'மெர்சல்' நடிகருக்கு விஜய் அளித்த பிறந்த நாள் பரிசு!

Monday, June 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த மிகப்பெரிய வெற்றிப்படம் 'மெர்சல்'. இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் தோன்றிய குட்டி விஜய் கேரக்டரில் நடித்திருந்த அக்சத் என்ற குழந்தை நட்சத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அக்சத், 'தளபதி 63' படப்பிடிப்பின்போது விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது விஜய், அக்சத்துக்கு ஒரு குட்டி கேமிரா ஒன்றை பரிசளித்து அசத்தினார்.

'மெர்சல்' திரைப்படத்தில் வெற்றிமாறன், மாறன் மற்றும் வெற்றி ஆகிய மூன்று கேரக்டர்களில் விஜய் நடித்திருந்தார் என்பதும் அதில் 'மாறன்' கேரக்டரின் சிறுவயது கேரக்டரில்தான் அக்சத் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.