close
Choose your channels

10ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய விஜய் ஹீரோயின்: வைரல் புகைப்படங்கள்!

Saturday, March 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை தனது பத்தாவது திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கௌதம் மேனன் இயக்கிய ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென். அதன்பின் இவர் விஜய்யின் ’பகவதி’ விஷாலின் ’செல்லமே’, ‘திமிறு’ சிம்புவின் ’வல்லவன்’ செல்வராகவனின் ’ஆயிரத்தில் ஒருவன்’ விக்ரமின் ’ராஜபாட்டை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் .

இந்தநிலையில் கடந்த 2012 ஆண்டு ஷிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட ரீமா சென்னுக்கு ருத்ரவீர் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் தனது பத்தாவது திருமண நாளை தனது கணவருடன் நடிகை ரீமாசென் சமீபத்தில் கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்களையும், திருமண தினத்தன்று எடுத்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதோடு, ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.