close
Choose your channels

அடுத்தடுத்து தனுஷூக்கு ஜோடியாகும் விஜய் பட நாயகிகள்!

Sunday, July 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகன் தற்போது தனுஷின் அடுத்த படத்தில் நடித்து வருகிறார் என்பதும், கார்த்திக் நரென் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்திற்கு பின் விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவும் தனுஷின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகயிருக்கும் படத்தில் தான் பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

விஜய்யின் அடுத்தடுத்த படங்களில் நடித்த இரண்டு நாயகிகள் தனுஷின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பது தற்செயலான ஒன்றா? அல்லது அபூர்வ ஒற்றுமையா? என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பூஜா ஹெக்டே ஏற்கனவே சிரஞ்சீவி நடித்து வரும் ’ஆச்சாரியா’, பிரபாஸ் நடித்துவரும் ’ராதே ஷ்யாம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ என்ற படத்தில்தான் அவர் அறிமுகமானார் என்றாலும் மீண்டும் தமிழ் திரையுலகில் விரைவில் பிசியாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.