close
Choose your channels

விஜய்யின் கடைசி படத்தில் நடிப்பது இந்த பிரபல இரண்டு நடிகைகளா? இசையமைப்பாளர் யார்?

Saturday, April 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்று கூறப்படும் ’தளபதி 69’ படத்தின் நாயகிகளாக ஏற்கனவே அவருடன் நடித்த இரண்டு நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருப்பதை அடுத்து இந்த கட்சி 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது. எனவே விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ’கோட்’ படத்தை முடித்தவுடன் அவர் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிப்பார் என்று கூறப்பட்டுள்ள நிலையில் அந்த படம் தான் ’தளபதி 69’ என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’தளபதி 69’ படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 69’ படத்தின் நாயகிகளாக சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தா ஏற்கனவே விஜய்யுடன் ’கத்தி’ ’தெறி’ ‘மெர்சல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் அதேபோல் விஜய் நடித்த ’பைரவா’ ’சர்கார்’ ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் தான் நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’தளபதி 69 ’படத்தில் சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடிகை இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருப்பதாகவும் விஜய் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.