close
Choose your channels

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்தின் வேட்பாளர் வெற்றி

Tuesday, February 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை 8 மணி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று வருகின்றன என்பதும் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முன்னிலையில் இருந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது .

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிமுக பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிடும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்களும் ஒரு சில தொகுதிகளில் போட்டியிட்டனர் என்பது தெரிந்ததே .

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி புதுக்கோட்டை நகராட்சி 4 வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பர்வேஸ் என்பவர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் ஒரு சில தொகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் நூற்றுக்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த வார்டு கவுன்சிலர்கள் வெற்றிபெற்ற நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.