close
Choose your channels

தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி: நெகிழ்ச்சி வீடியோ..!

Sunday, December 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் கனமழை மற்றும் பெரு வெள்ளம் ஏற்பட்டு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. கனமழை பெய்த போதிலும் சாலையில் தேங்கி இருந்த ஏராளமான குப்பைகளை இரவும் பகலுமாக மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் அகற்றினர்.

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சாலைகளில் தேங்கி இருந்த ஏராளமான வெள்ளத்தில் அடித்துச் வந்த குப்பைகளை இரவும் பகலும் தூய்மை பணியாளர்கள் அகற்றுவது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பாராட்டுக்கள் குவிந்தது.

இந்த நிலையில் சென்னை புறநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் சரவணன் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் 120 பேருக்கு பாத பூஜை செய்தார். பாத பூஜை செய்த விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிக்கு தூய்மை பணியாளர்கள் ஆசி வழங்கினார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.