close
Choose your channels

விஜய்சேதுபதிக்கு மீண்டும் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்?

Thursday, March 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் தயாரித்த 'கனா' வெற்றிக்கு பின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நாயகியாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது அவர் விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்' மற்றும் 'தர்மதுரை' ஆகிய படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது நான்காவது முறையாக விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை இன்று வெளியாகியுள்ள 'ஐரா' படத்தின் இயக்குனர் கே.எம்.சர்ஜூன் அவர்களிடம் உதவியாளராக இருந்த விருமாண்டி என்பவர் இயக்கவுள்ளார்.

மேலும் 'ஐரா' படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.