close
Choose your channels

ரஜினிக்கு ஆதரவான கருத்தா? விஜய்சேதுபதி விளக்கம்

Friday, June 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் தூத்துகுடி போராட்டம் குறித்தும், சமூக விரோதிகள் குறித்தும் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தை ஆதரித்து விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து கூறியதாக செய்திகள் வெளிவந்தன.

ஆனால் இந்த செய்தியை விஜய்சேதுபதி மறுத்துள்ளார். விஜய்சேதுபதி தனது சமுக வலைத்தளத்தில் இதுகுறித்து விளக்கமளித்தபோது, டுவிட்டரில் நான் கூறியதாக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது. அந்த கருத்துக்கள் என்னுடைய பெயரில் இயங்கும் போலிகளின் செயல் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

முன்னதாக விஜய்சேதுபதியின் போலி டுவிட்டர் பக்கத்தில், 'தமிழ்நாட்டுக்கு யாராவது வந்து நல்லது செய்யட்டும் என்கிற எண்ணத்தை விட.. ரஜினியால் நல்லது எதுவும் நடந்து விடக்கூடாதே என்கிற பதட்டம்தான் இங்கு நிறைய பேருக்கு. என்று பதிவு செய்யப்பட்டு இந்த கருத்து டிரெண்டுக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.