close
Choose your channels

உண்மையான 'லாபம்' என்றால் என்ன? டிரைலர் விமர்சனம்

Friday, September 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘லாபம்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் 2ஆவது ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி முக்கிய வேடத்திலும் ஜெகபதி பாபு வில்லன் வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் விவசாயிகளின் நிலத்தை ஆக்கிரமித்து எட்டு வழி சாலை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஹீரோ ஒருவரின் கதை என்பது இந்த ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது.



உண்மையான லாபம் என்றால் என்ன? உண்மையான உள்கட்டமைப்பு என்றால் என்ன? என்பதற்கு விஜய் சேதுபதி கொடுக்கும் விளக்கம் அசத்தலாக உள்ளது. இந்த படம் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படத்தை மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதன் அவர்கள் இயற்றி உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படம் வரும் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு, சாய் தன்ஷிகா, கலையரசன், ரமேஷ் திலக், பிரிதிவிராஜன், உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவில் கணேஷ் குமார் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை விஜய் சேதுபதி மற்றும் ஆறுமுகக்குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.