close
Choose your channels

முடிவுக்கு வருகிறது விஜய்சேதுபதியின் விவசாய புரட்சி!

Saturday, February 15, 2020 • தமிழ் Comments

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்கள் தற்போது எத்தனை படங்களில் நடித்து வருகிறார் என்று அவரிடமே கேட்டால் கூட அவரால் உடனடியாக பதிலளிக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் ஒரே நேரத்தில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று ’லாபம்’. இயற்கை, பேராண்மை உள்ளிட்ட சில படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது 

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருவதாகவும் இன்னும் இருபத்தைந்து நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது. விவசாய புரட்சியாளராக விஜய்சேதுபதி நடித்து வரும் இந்த படம் அரசுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்த கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்சேதுபதியின் விவசாய போராட்ட படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வந்து அதன்பின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz