close
Choose your channels

விஜய்யின் 'பிகில்' படத்துடன் மோதும் பிரபல நடிகரின் படம்

Tuesday, July 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' திரைப்படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள், வியாபாரம் மற்றும் புரமோஷன் ஆகியவை ஒரே நேரத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதில் தயாரிப்பு தரப்பும் படக்குழுவினர்களும் உறுதியாக உள்ளனர்.

இந்த நிலையில் விஜய் படம் ரிலீஸ் என்றாலே மற்ற பிரபல நடிகர்களின் படங்கள் ஒதுங்கிவிடுவது வாடிக்கை. ஆனால் இந்த முறை 'பிகில்' படத்துடன் விஜய்சேதுபதியின் படம் மோத வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

விஜய்சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' திரைப்படத்தை வரும் தீபாவளி அன்று வெளியிட படகுழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், அதனை நோக்கி பணிகள் நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

சிம்புவின் 'வாலு' பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடித்துள்ளார். விவேக் மெர்வின் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.