close
Choose your channels

பாலிவுட் படத்தின் விஜய்சேதுபதியின் ஸ்டைலிஷ் லுக்: வைரல் புகைப்படம்

Monday, March 22, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’மாநகரம்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி, முனிஸ்காந்த் படத்தில் நடித்து கொண்டிருப்பதாகவும் இந்த படத்தை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கி வருவதாகவும் வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்.

’மும்பைகார்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் விஜய் சேதுபதி கேரக்டரின் அட்டகாசமான லுக் தற்போது வெளிவந்துள்ளது. விஜய்சேதுபதி கோட், சூட், கூலிங்கிளாஸ் கண்ணாடியுடன் ஸ்டைலாக இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிக்கும், விஜய் சேதுபதி ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

இந்த படம் மட்டுமின்றி பாலிவுட்டிலும் மேலும் ஒரு திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பதும் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கேத்ரினா கைஃப் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.