close
Choose your channels

போயி வேற வேலை இருந்தா பாருங்கடா...: விஜய் வீட்டின் ரெய்டு குறித்து விஜய்சேதுபதி டுவீட்

Wednesday, February 12, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய், பிகில் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செல்வன் ஆகியோர்கள் இல்லங்களில் திடீரென வருமான வரித்துறை சமீபத்தில் அதிரடி ரெய்டு செய்தது என்பது தெரிந்ததே.

இந்த ரெய்டு குறித்து பல்வேறு வகையான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது என்பதும் அவற்றில் பெரும்பாலானவை கற்பனைகள் கலந்த வதந்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் இந்த ரெய்டு குறித்து வெளியான செய்தியில், ‘விஜய் உள்பட திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு கருப்பு பணத்தை உபயோகிப்பதாகவும், பிகில் பணத்தில் கிடைத்த லாபத்தை கிறிஸ்துவ மதமாற்ற வேலைக்காக பயன்படுத்தியதாகவும், இதில் விஜய், விஜய்சேதுபதி உள்பட முன்னணி நடிகர்கள் உடந்தை என்றும், இதனை கடந்த சில மாதங்களாக உற்று நோக்கி வந்த வருமான வரித்துறை தகுந்த ஆதாரங்களுடன் தற்போது ரெய்டு செய்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தி குறித்து நடிகர் விஜய்சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் "போயி வேற வேலை இருந்தா பாருங்கடா..." என்று கடுப்புடன் பதிவு செய்துள்ளார் இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.