close
Choose your channels

தானாவே போதை ஏறுகிற மாதிரி ஒரு வியாதி சார்.. 'குடிமகான்' டிரைலர்..!

Monday, February 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சிவன், சாந்தினி தமிழரசன் நடித்த ’குடிமகான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

குடிப்பழக்கம் இல்லாமலே தானாகவே போதை ஏறும் ஒருவனின் உடலில் உள்ள ரகசியம் என்ன என்பதை அறிய குடிமகன்கள் அவரை சுற்றி சுற்றி வளைப்பது தான் காமெடியாக பின்னப்பட்டுள்ள இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர்களில் ஒருவரான பிரகாஷ் என்பவரின் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் விஜய் சிவன், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, சேதுராமன், நமோ நாராயணன், கதிரவன், ஹானஸ்ட் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார். தமிழ் திரையுலகில் வித்தியாசமான காமெடி கதை அம்சமுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.