close
Choose your channels

பாடகியாக மாறிய விஜய் டிவி பிரபலம்

Friday, April 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் 'கலக்க போவது யாரு', கிங்ஸ் ஆப் காமெடி, சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரியங்கா தற்போது திரைத்துறையிலும் காலடி வைத்துள்ளார். ஆம் அவர் தற்போது பாடகியாக மாறியுள்ளார்.

கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் இயக்குனர் எம்.முத்தையா இயக்கிய 'தேவராட்டம்' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலான 'மதுரை பளபளக்குது' என்ற பாடல் சிங்கிள் பாடலாக இன்று வெளியாகவுள்ளது. நிவாஸ் கே.பிரசன்னா இசையில் உருவாகியுள்ள இந்த பாடலைத்தான் விஜய் டிவி பிரபலம் பிரியங்கா பாடியுள்ளார்.

இந்த பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடலை மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இன்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.