close
Choose your channels

விக்ரம்-ஐஸ்வர்யா ராய் இணையும் இன்னொரு படம்.. தயாரிப்பாளர், இயக்குனர் யார் தெரியுமா?

Sunday, May 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ராவணன்’ என்ற திரைப்படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்தனர். அதன் பிறகு சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் இருவரும் ஆதித்த கரிகாலன் மற்றும் நந்தினி கேரக்டர்களில் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யாராய் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரையும் இணைத்து படம் எடுத்த இயக்குனர் மணிரத்னம் தான் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மணிரத்னம் தற்போது கமல்ஹாசனின் 234 வது படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் இருக்கிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் விக்ரம் - ஐஸ்வர்யா ராய் படத்தை படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.