கமல்-விக்ரம் இணையும் படத்தின் மாஸ் டைட்டில்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
உலக நாயகன் கமல்ஹாசன் விரைவில் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கவிருக்கும் செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன் நடிக்கவிருக்கும் இந்த படத்தின் டைட்டில் 'கடாரம் கொண்டான்' என்று வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் தற்போது இணையத்தில் வெளியாகி டிரெண்ட் ஆகியுள்ளது.
'தூங்காவனம்' பட இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இயக்கவுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். த்ரில் படமாக உருவாகவுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் விக்ரமுக்கு கைவிலங்கு போடப்பட்டிருப்பது போன்ற தோற்றம் அட்டகாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.