close
Choose your channels

'தங்கலான்' படப்பிடிப்பு நிறைவு.. ஸ்மார்ட் கெட்டப்புக்கு மாறிய விக்ரம்.. வைரல் புகைப்படங்கள்..!

Friday, July 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விக்ரம் கடந்த சில மாதங்களாக பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வந்த ’தங்கலான்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த படத்திற்காக அவர் நீண்ட தாடியுடன் கூடிய கெட்டப்பில் இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் ’தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் படத்தின் இறுதி நாள் குறித்த புகைப்படங்கள் வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் விக்ரம் தற்போது தனது கெட்டப்பை மாற்றி உள்ளார். நீண்ட தாடியை எடுத்து விட்டு அவர் வித்தியாசமான தோற்றத்தில் தற்போது காட்சியளிக்கிறார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

’தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதை அடுத்து விக்ரம் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அவர் நடித்த ’துருவ நட்சத்திரம்’ என்ற திரைப்படம் ரிலீஸ்க்கு விரைவில் தயாராகிய நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.