close
Choose your channels

விஷாலின் துப்பறிவாளன்: முதல் இரண்டு நாள் வசூல் விபரம்

Sunday, September 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்த 'துப்பறிவாளன்' திரைப்படம் ரிலீசுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கடந்த வியாழன் அன்று வெளியானது. வெளியான முதல் நாளே இந்த படத்திற்கு ஊடகங்களில் பாசிட்டிவ் ரிசல்ட் மற்றும் சமூக வலைத்தளங்களில் கிடைத்த வரவேற்பு இந்த படத்தின் வசூலிலும் எதிரொலித்தது.

தமிழகத்தில் இந்த படம் முதல் இரண்டு நாட்களில் ரூ.5.2 கோடி வசூலித்துள்ளது. ரிலீஸ் தினமான வியாழன் அன்று ரூ.2.34 கோடியும், அடுத்த நாள் வெள்ளியன்று ரூ.2.8 கோடியும் வசூலித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களின் வசூல் ரூ.71 லட்சம், நெல்லை-குமரி பகுதியில் ரூ.23 லட்சம், சேலம் பகுதியில் ரூ.24 லட்சம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஏற்கனவே சனி, ஞாயிறு காட்சிகளுக்கு கணிசமான அளவில் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால் இந்த படத்தின் ஒப்பனிங் வசூல் திருப்திகரமாக இருக்கும் என்றும், விஷால்-மிஷ்கின் கூட்டணிக்கு இது முதல் வெற்றியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஓப்பனிங் வசூலான முதல் நான்கு நாள் வசூல் குறித்து நாளை பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.