close
Choose your channels

ஆர்.கே.நகரில் விஷால் தர்ணா போராட்டம்:

Tuesday, December 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆர்.கே.நகரில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷாலும் அவருடைய ஆதரவாளர்களும் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தனது வேட்பு மனு நிராகரிப்பு குறித்து, தேர்தல் அலுவலர் வேலுச்சாமியுடன் விஷால் விளக்கம் கேட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

வேட்புமனு நிராகரிப்பு குறித்து விஷால் கூறுகையில், 'எனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது நியாயமே இல்லை. 'இளைஞர்கள் அரசியலுக்கு வரக்கூடாதா? தேர்தலில் போட்டியிடக்கூடாதா? என்று ஆவேசமாக செய்தியாளர்களிடம் பேசினார்.

விஷாலின் வேட்புமனு நிராகரிப்பட்டது தொடர்பாக சட்ட ரீதியாக போராடுவோம் என்று நடிகர் ரமணா  கூறியுள்ளார்

இந்த நிலையில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து விஷாலும் அவரது ஆதரவாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.