close
Choose your channels

திரையரங்குகளில் விஷாலின் 'சக்ரா': ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Sunday, January 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் பல திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீசாகி வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகள் திறக்கப்பட்ட போதிலும் பார்வையாளர்கள் கூட்டம் அதிகம் வரவில்லை என்பதால் ஓடிடி ரிலீஸ் தொடர்ந்து கொண்டே இருந்தது

அந்த வகையில் விஷாலின் ’சக்ரா’ திரைப்படமும் ஓடிடியில் ரிலீசாகும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியான தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் இரண்டே வாரங்களில் திரையரங்குகளில் மட்டும் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததால் பல தயாரிப்பாளர்களுக்கு திரையரங்குகள் மீது மீண்டும் நம்பிக்கை வந்தது

இந்த நிலையில் ’சக்ரா’ திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்த தயாரிப்பு நிறுவனம் தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் சற்று முன்னர் விஷாலின் ’சக்ரா’ திரைப்படம் பிப்ரவரி 19ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகளை விஷால் விரைவில் தொடங்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.