close
Choose your channels

டிடிவி தினகரனுடன் நடிகர் விஷால் திடீர் சந்திப்பு

Wednesday, August 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைப்பு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளர்கள் எந்த நேரத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்க்கவோ அல்லது முதல்வரை மாற்றவோ செய்யும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் இன்று டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். விஷாலின் தங்கை ஐஸ்வர்யாவின் திருமண அழைப்பிதழை தினகரனுக்கு கொடுக்கவே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

தினகரன் மட்டுமின்றி மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து விஷால் திருமண அழைப்பிதழை கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.